கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை மக்கள் தரலாம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதன் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றது. அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது தொழிலை நடத்த முடியாமல் கிடக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசும், மத்திய நிதி அமைச்சகமும் பல்வேறு சலுகைகளை அறிவித்தன.
இந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தங்களால் இயன்ற நிதி உதவியை அளிக்க வேண்டுமென ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பேரிடர்களின் போது மக்களை காக்க இது போன்ற நிதியுதவிகள் உதவும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அதன்படி, நிதியளிக்க வேண்டிய வங்கி கணக்கு எண்ணையும் தெரிவித்துள்ளார்.
Name of Bank & Branch : State Bank of India, New Delhi Branch, UPI ID : pmcares@sbi
Account : PM CARES, Ac NO : 2121PM 20202, IFSC : SBIN0000691-ல் நிதியுதவி அளிக்கலாம்.
SWIFT Code : SBININBB 104 -ல் வெளிநாடுவாழ் இந்தியர்கள் நிதியுதவி அளிக்கலாம்.
देशवासियों से मेरी अपील है कि वे कृपया PM-CARES फंड में अंशदान के लिए आगे आएं। इसका उपयोग आगे भी इस तरह की किसी भी आपदा की स्थिति में किया जा सकता है। इस लिंक में फंड के बारे में सभी महत्वपूर्ण विवरण दिए गए हैं। https://t.co/wOHWrqoviH
— Narendra Modi (@narendramodi) March 28, 2020