மக்களவை தேர்தலில் வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.80 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார். அங்கு முக்கிய பகுதிகள், குடியிருப்பு வீதிகளில் ஊர்வலமாக சென்று வாராணசி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். இதை தொடர்ந்து அங்கு பாஜகசார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி உரையாற்றுகிறார். பிரதமர் வருகையையொட்டி பலத்த அங்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுளள்து.