டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,56,183 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14,476 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,83,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் ஆலோசனை நடத்துகிறார். வரும் 30ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடியும் நிலையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. சீனாவுடனான எல்லை பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக்கு பின்னர் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.