Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை..!!

மக்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற இருக்கும் நிலையில் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நேற்று நடைபெற்ற பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார்.

Image result for மோடி அமைச்சர்களுடன் ஆலோசனை

இதையடுத்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

Image result for மோடி அமைச்சர்களுடன் ஆலோசனை

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும் , எதிராக 41 வாக்குகளும் பதிவாகி ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை  தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீது மக்களவையில் சற்று நேரத்தில் விவாதம் தொடங்க இருக்கும் நிலையில், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |