நமது நாட்டுக்காக தைரியமான முடிவுகளை எடுக்கும் நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இந்திய வர்த்தக சபையின் 95 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரை நிகழ்த்தினார்.. அப்போது அவர் பேசுகையில், தற்போது நம் நாட்டிற்காக தைரியமான முடிவுகளையும், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக முக்கிய முதலீடுகளையும் செய்யும் நேரம் வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை வெளியிட்டார். அதில்,
- நிலத்தடி நீர் ஆதாரங்களைப் பெருக்குதல்.
- சூரிய சக்தி மின்சாரத்திற்கு முக்கியத்துவம் அளித்தல்.
- இளைஞர்களை விவசாயத்திற்கு ஈடுபடுத்த ஊக்குவித்தல்.
- சணல் சாகுபடியில் கூடுதல் கவனம் செலுத்துதல்.
- அத்தியாவசிய பொருள்களுக்கான உள்நாட்டு சங்கிலியை மேம்படுத்துதல்.
- நிலக்கரி மற்றும் சுரங்கத் துறையை வலுப்படுத்துதல்.
- உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை வாங்க ஊக்குவித்தல்.
நாட்டின் உற்பத்தி பொருள்களுக்கு அந்நிய நாடுகளில் வரவேற்பை அதிகரித்தல் ஆகியவற்றைத் தெரிவித்தார்.