ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம், எனவே ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனா பாதிப்பு குறித்து பேச வந்திருக்கிறேன். ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நாட்டு மக்களுக்கு நன்றி. ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகள், வியாபாரிகள், பெரியவர்கள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
சமூக விலகலே கொரோனா பரவுவதை தடுக்க சிறந்த வழி என்பது தெளிவாகியுள்ளது. கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்க கூடாது. பிரதமர் .கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முடக்கம் என்றார்.
மேலும் “இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம் எனவே ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவது மிக கடினம். வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவை கொண்டு கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100% கட்டுப்படுத்துவது சாத்தியம்” என்று கூறினார்.