Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடி ராஜினாமா…. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் சந்திப்பு..!!

பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி வழங்கினார்.

பாராளுமன்ற  தேர்தலில் பாரதிய ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக  தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க  272 இடங்கள் தேவை. ஆனால் பாஜக தனியாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடமாக 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய அளவில் திமுக மட்டும்   23 இடங்களில் வெற்றி பெற்று  3-வது இடத்தை பிடித்துள்ளது. மோடி வருகின்ற  30-ம் தேதி இரண்டாவது முறையாக மீண்டும் நாட்டின் பிரதமராக பதவி வகிக்க  உள்ளார்.

ஜனாதிபதியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார் மோடி: 30-ம்தேதி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார்

இந்நிலையில் இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள் பங்கேற்றனர். ஆனால்  உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அருண் ஜெட்லி இதில் பங்கேற்கவில்லை. இக்கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து  பிரதமர் மோடி புதிய அரசு அமைப்பதற்காக  டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.  அப்போது மத்திய அமைச்சர்கள் தனது ராஜினாமா கடித்தை அவரிடம் வழங்கினார்கள். இந்த கடிதத்தை  ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Categories

Tech |