கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காலத்தில் இந்தியா சரியான நடவடிக்கை எடுத்துள்ளது என கூறிய அவர், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே அரசின் முதல் நோக்கம், கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என தெரிவித்துள்ளார். எண்ணம், கண்டுபிடிப்புகள், முதலீடு, உள்கட்டமைப்பு ஆகியவை பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் காரணிகள் என அவர் கூறியுள்ளார். 25 ஆண்டு கால வரலாற்றில் இந்திய தொழில் கூட்டமைப்பு பல சவால்களை சந்தித்துள்ளது.
தொழிலதிபர்களின் திறமையால் இந்தியா, மீண்டும் முழு வளர்ச்சி பெறும், நாட்டின் திறமை மற்றும் தொழில்நுட்பத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். ‘Made In India ‘ பொருட்கள் உலகம் முழுவதும் பிரபலமாக வேண்டும் என்பதே எனது ஆசை என கூறிய அவர், கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஏழை, எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பெரும் உதவிகரமாக இருக்கின்றன. விவசாயப் பொருட்களை மின்னணு வர்த்தகத்தின் மூலமாகவும் விற்பனை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.