இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இனரீதியாக சமூக ஊடகங்களில் விமர்சிப்பவர்களை கால்பந்து போட்டிகளை நேரில் பார்வையிட இனி தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் உள்ள விம்ப்ளி மைதானத்தில் ஐரோப்பிய நாடுகள் கலந்து கொண்ட யூரோ கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதிக்கொண்டதில் இத்தாலியிடம் இங்கிலாந்து பெனால்ட்டி சூட்டில் தோல்வியடைந்துள்ளது. அதில் இங்கிலாந்து அணியில் உள்ள மூன்று கருப்பின வீரர்கள் ( Marcus Rashford, Bukayo Sako, jadon Sancho ) பெனால்டி சூட்டை தவறவிட்டது தான் தோல்விக்கு காரணம் என்று கூறி இணையத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் பலரும் இனவெறியை தூண்டும் வகையில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராளுமன்றத்தில் பேசிய போது இது ஒரு கண்டிக்கத்தக்க செயல் என்றும், அரசாங்கம் இவ்வாறு இன ரீதியான செயல்களில் ஈடுபடுபவர்களை பட்டியலில் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கால்பந்து போட்டி தொடர்பாக இனி இனரீதியாக சமூக ஊடகங்களில் ஏதேனும் விமர்சிக்கப்பட்டால் அவர்களுக்கு போட்டியை நேரில் காண தடை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் காவல்துறையினர் மற்றும் போரிஸ் அரசு அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பான செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.