கோழி பண்ணையாளர்கள் போராட்டத்தால் தமிழகத்தில் கோழிக்கறி விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் பிராய்லர் கோழி நிறுவனங்கள் கோழி குஞ்சுகளையும், தீவனங்களையும் பண்ணைகளுக்கு கொடுத்து வளர்க்கிறார்கள். 45 நாட்கள் வளரும் பிராய்லர் கோழிகளின் எடையை பொறுத்து கோழிப் பண்ணைகளுக்கு கூலி வழங்கப்படுகிறது. பிராய்லர் கோழிக்கு 4 முதல் 6 ரூபாய் வரை கூலி வழங்கப்படுகிறது. இந்தநிலையில் பிராய்லர் கோழிக்கு கிலோவுக்கு ரூபாய் 15 ஆக உயர்த்தி வழங்க கோரி கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 800 கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்றைய கால விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு எங்களுக்கும் உரிய விலையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ள பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை நிறைவேற வில்லை என்றால் பண்ணையில் உள்ள பிராய்ல கோழிகளையும் தரமாட்டோம், பண்ணைக்கு தேவையான கோழி குஞ்சுகளையும் இனிமேல் வாங்க மாட்டோம் என்று கோரிக்கை வைத்துள்ளனர். போராட்டம் நாளையும் தொடரும் பட்சத்தில் கோழி கறி தட்டுபாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விலை தற்போது 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் கோழிக்கறி விலை 500 ரூபாய் வரை விற்கப்படும் என்று பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.