Categories
உலக செய்திகள்

சும்மா விடாதிங்க….!! “நமது ரத்தத்திற்கு விலை தரப்போவது இல்லை”…. உக்ரைன் அதிபரின் ஆவேசம்….!!!

நமது ரத்தத்துக்காக ரஷ்யாவின் யூரோக்கள் மற்றும் டாலர்கள் கொடுக்கப்படுவது இல்லை என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இரு நாடுகளுக்கு இடையிலான போர் சுமார் மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்து வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும் இரு தரப்பிலும் பலத்த உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு போர்க்குற்றவாளி என்று அறிவித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது. “உக்ரைனுக்கு எதிரான போருக்கு ரஷ்யாவிற்கு மிகுந்த வேதனையை கொடுபதற்கு உலகில் உள்ள அனைவரும் தார்மீக ரீதியாக ஒரு முடிவை எடுத்து ரஷ்யாவின் அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உக்ரைனியர்கள் உள்ளதால் செய்திதொடர்பாளர்களையும், அரசியல்வாதிகளையும் தொடர்பு கொண்டு பேசுங்கள். ரஷ்ய வணிகத்திற்கு அழுத்தம் கொடுத்து சந்தையை விட்டு வெளியேற செய்யுங்கள். நமது ரத்தத்துக்காக ரஷ்யாவின் யூரோக்கள் மற்றும் டாலர்கள் கொடுக்கப்படுவது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |