மலேசியாவில் ஒரு பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றிற்காக 30 நாட்கள் தூங்கினால் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.
தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது தான். அதற்காக தூங்குபவர்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்பது எங்கே நடக்கும். மலேசியாவில் நடக்கிறது. அதாவது, மலேசியாவில் இருக்கக்கூடிய மலாயா என்ற பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
அதற்காக 30 நாட்கள் தூங்கினால் சன்மானம் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. எனவே, 30 நாட்கள் தூங்க தயாராக இருப்பவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். மொத்தமாக 26,500 ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.