பீகாரில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியை அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் மக்களிடையே தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பல மாதங்களாக பல கட்டங்களில் தொடர்ந்து அமலில் இருந்து வந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தபட்டதை தொடர்ந்து, பல செயல்களுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில்,
சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3,7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் பீகார் மாநிலத்தில் பெண்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக மாணவிகள் பள்ளி படிப்பை முடித்தால் ரூபாய் 25 ஆயிரமும், கல்லூரி படிப்பை முடித்தால் ரூபாய் 50 ஆயிரமும் வழங்கப்படும் என தற்போதைய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும் நீர்ப்பாசன வசதி செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளார்.