எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தங்களுடைய பெரும்பான்மையை நிரூபித்ததால் இஸ்ரேல் நாட்டின் பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு 30 இடங்களில் வெற்றி பெற்றும் கூட அவரால் கூட்டணி ஆட்சியை அமைக்க முடியவில்லை. இதனால் அந்நாட்டில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து கொண்டு வந்தது. இதனை தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்திய எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஆட்சியை அமைப்பதற்கு முடிவு மேற்கொண்டுள்ளது.
அதன்படி மொத்தம் 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்ததால் மொத்தமாக 62 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே ஒன்றாக சேர்ந்த எதிர்க் கட்சியின் தலைவர்கள் சுழற்சி முறைப்படி பிரதமர் பதவியை ஏற்று புதிய ஆட்சியை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது யாமினா கட்சியினுடைய தலைவரான நப்தாலி பென்னட் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்பார் என்பதை தொடர்ந்து, பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதனால் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பொறுப்பை நப்தாலி பென்னட் பெற்றுள்ளார்.