Categories
உலக செய்திகள்

பிரான்சில் நடந்த அதிபர் தேர்தல்…. முதல் சுற்று முடிவில்… இமானுவேல் மேக்ரான் முன்னிலை…!!!

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரான்சில் அதிபராக உள்ள இமானுவேல் மேக்ரான் இரண்டாவது தடவையாக அதிபர் தேர்தலில் களமிறங்கினார். தேர்தலில் 12 அதிபர் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதன்படி தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இமானுவேல் மேக்ரான் 28.50% வாக்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இரண்டாவது கட்ட தேர்தலுக்காக கடின உழைப்பு தேவை என்று கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அதிபர் வேட்பாளர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தலானது வரும் 24-ம் தேதியன்று நடக்கிறது. இதில் வாக்காளர்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும். இமானுவேல் மேக்ரோன் அடுத்த இரண்டு வாரங்களில் தேர்தல் பிரசாரத்தை மேலும் அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறார்.

Categories

Tech |