இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தேர்தலின் போட்டியில் இருக்கும் ரிஷி சுனக்கும் லிஸ் ட்ரஸ்ஸும் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இங்கிலாந்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடக்கிறது. அதற்கான போட்டியில் இருக்கும் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் இருவரும் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
ரிஷி சுனக் மீது உடை அலங்காரம், சொத்து குவிப்பு போன்ற பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அதேபோன்று லிஸ் டிரஸ் மீது பொருளாதார பிரச்சனைகள் தொடர்பில் தகுந்த அறிவு கிடையாது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. எனவே, விவாதம் பெரும் பரபரப்பாக மாறியது.