“தளபதி 65” படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா செல்லும் தளபதி விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் காதல், நகைச்சுவை, அதிரடி ஆக்ஷ்ன் நிறைந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
“தளபதி65” படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இருப்பினும் தேர்தல் முடிந்த பின்னரே படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தலில் ஓட்டு போட சைக்கிளில் வந்த விஜயின் செயல் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
இதை தொடர்ந்து படக்குழு முன்பு தெரிவித்திருந்த படியே “தளபதி65” படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற உள்ளது. இதனால் தளபதி விஜய் ஜார்ஜியா செல்வதற்கு விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.