Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏன் இவ்வளவு கூட்டமா இருக்கு… சிரமப்படும் கர்ப்பிணி பெண்கள்… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக கர்ப்பிணி பெண்கள் சமூக இடைவெளியின்றி நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையானது தற்போது குறைந்து வருகிறது. ஆனால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் முகக்கவசம் அணிந்தாலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. இதனை அடுத்து கர்ப்பிணி பெண்கள் மருத்துவ பரிசோதனைக்காக நீண்ட நேரம் சமுக இடைவெளியின்றி வரிசையில் காத்திருக்கின்றனர்.

இதனால் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கர்ப்பிணிப் பெண்கள் காத்திருக்கும் அறையில் மின்விசிறி கூட செயல்படாததால், அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளை நாற்காலியில் அமர வைத்து பரிசோதனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மருத்துவ நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |