Categories
மாநில செய்திகள்

எல்லாமே அவங்களாலதான்… 3 கிலோமீட்டர் நடந்தே சென்ற கர்ப்பிணி பெண்…. அதிகாரிகள் அளித்த தண்டனை…!!

9 மாத கர்ப்பிணி பெண் வெறும் தண்ணீர் பாட்டிலுடன் 3 கிலோமீட்டர் தூரம் காவல் நிலையத்திற்கு நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள மட்கம்சஹி என்ற பகுதியில் பிக்ரம் பிருளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருபதி என்ற 9 மாத கர்ப்பிணி மனைவி உள்ளார். இந்நிலையில் இந்த தம்பதியர் இருவரும் மோட்டார் சைக்கிளில் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் உதாலா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் பிகோனியா பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, சாரத் காவல் நிலைய இரு காவல்துறையினர் இவர்களின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து உள்ளனர். அப்போது குருபதி ஹெல்மெட் மற்றும் முககவசம் அணியாத காரணத்தினால் காவல்துறையினர் அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

அந்த சமயம் பிக்ரமிடம் போதிய பணம் இல்லாத காரணத்தினால் தனது மனைவியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று விட்டு அபராதம் செலுத்த வருவதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அதனை ஏற்காத காவல்துறையினர் பிக்ரமை அவரது மோட்டார் சைக்கிளுடன் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து குருபதி தானும் தனது கணவருடன் வருவதாகக் கூறிய போது அதனை ஏற்றுக்கொள்ளாத காவல்துறையினர் அந்த இடத்திலேயே அவரை விட்டுவிட்டு அவரது கணவரை மட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கையில் பணமும், செல்போனும் இல்லாத குருபதி ஒரு பாட்டில் தண்ணீருடன் மட்டும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் மதிய வெயிலில் நடந்து சாரத் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் பிக்ரம் தனது பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அபராதத்தை செலுத்திவிட்டு தனது மனைவியை உதாலா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இது குறித்து அறிந்தவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டின் படி, 9 மாத கர்ப்பிணி பெண்ணை சுமார் 3 கிலோமீட்டர் வரை நடக்க வைத்த அந்த இரண்டு காவல் துறையினரையும் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

Categories

Tech |