Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தரக்கூடாது…. வெளியான அறிவிப்பு..!!!

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீரில் கலந்து கொடுக்கப்படும் 2 டிஜி மருந்தினை கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொடுக்கக்கூடாது என டிஆர்டிஓ அறிவித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 2 டிஜி என்ற மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்கலாம் எனது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டது. மருத்துவரின் அறிவுரைப்படி இந்த மருந்தினை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகங்களுடன் இணைந்து 2 டிஜி என்ற மருந்தை உருவாக்கியுள்ளது.

இந்த மருந்தை லேசான அறிகுறிகள் கொண்டவர்கள் தண்ணீரில் கலந்து முதல் மூன்று நாட்கள் குடித்து வந்தால் குணமடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தது. மேலும் இதனை உட்கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை 40% குறைக்கின்றது எனவும் தெரிவித்தது. ஜூன் மாதத்திலிருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வரும் என டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

தற்போது கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் மற்றும் இருதய நோய் பாதிப்பு போன்ற இணை நோய் கொண்டவர்கள் இந்த மருந்து கொடுத்து பரிசோதிக்க படாத காரணத்தால் இவர்கள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த மருந்து கொடுக்கக் கூடாது என்று டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. இதற்கான வழிமுறைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டு உள்ளது எனவும், மருத்துவர்களின் பரிந்துரை படியே இந்த 2 டிஜி மருந்தினை நோயாளிகளுக்கு தரலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |