Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

10 வருடத்திற்கு முன்பும் இப்படிதான்… இந்த ஆண்டு அதிகமா வெயில் இருக்கும்… மூத்த விவசாயியின் கணிப்பு…!!

மாமரங்களில் அதிக அளவு பூக்கள் பூத்து உள்ளதால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என விவசாயி ஒருவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்தால் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் தாமிரபரணி, காவிரி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி, மதுரை மாவட்டம், பாலமேடு, மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் உள்ள மாமரங்களில் இலைகளே தெரியாத அளவிற்கு பூக்கள் அதிகமாக பூத்துள்ளன.

இதுகுறித்து ராஜபாளையத்தில் வசிக்கும் மூத்த விவசாயி ராமச்சந்திர ராஜா என்பவர் கூறும்போது, பொங்கும் காலம் புளியங்காய் மங்கும் காலம் மாங்காய் என கூறியதோடு, மங்கும் காலத்தில் அதிகளவு மா மரங்களில் பூக்கள் பூத்து உள்ளதால் இந்த ஆண்டு அதிக அளவில் வெயிலின் தாக்கம் இருப்பதற்கு வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். இதனையடுத்து சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மா மரங்கள் அதிகமாக பூத்துக் குலுங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாகவும், பருவமழை நன்றாக பெய்த காரணத்தால் அதிக அளவு பூக்கள் பூத்துள்ளதால் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |