5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகக் கலைகள் உலகம் முழுவதும் பரவுவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஐநா சபையில் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியதால், அன்றிலிருந்து ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. யோகக்கலை உடல், மனம், அறிவு, உணர்வு, ஆன்மீக வளர்ச்சி மற்றும் சமன்பாட்டில் இருக்க உதவுகிறது. இந்தியாவில் பதஞ்சலி முனிவர் மூலமாக தோன்றி அவரின் வழிவழியாக தற்போது வரை நாம் யோகா கலையை பயன்படுத்தி வருகிறோம்.
விருக்ஷா ஆசனம்
மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தவும் கை, முதுகு, கால், தொடை, தோல்பட்டை ஆகியவற்றை பலப்படுத்துவதற்கும் இந்த ஆசனம் உதவுகிறது.
நகுல் ஆசனம்
முதுகு மற்றும் இடுப்பு பகுதியை பலப்படுத்துவதற்கும், இடுப்பில் இருக்கும் சதைகளை குறைப்பதற்கும் இந்த ஆசனம் உதவுகிறது.
சக்கி சலான் ஆசனம்
நரம்பு மண்டலத்தையும் வயிற்றில் இருக்கும் உறுப்புகளையும் பலப்படுத்துவதற்கு இந்த ஆசனம் உதவிபுரியும்.
உதன் ஆசனம்
இடுப்பு மற்றும் கால்களை பலப்படுத்துவதற்கும் மாதவிடாய் பிரச்னையை சரி செய்யவும் இந்த ஆசனம் உதவுகின்றது.
பரிவிர்த்தி ஜானு ஆசனம்
சிறுநீரகம், வயிற்றுப் பகுதி மற்றும் கல்லீரல் போன்ற பகுதிகளை பலப்படுத்துவதற்கும் தலைவலி பிரச்சனையை சரி செய்யவும் இந்த ஆசனம் உதவி புரியும்.
தனுர் ஆசனம்
வயிற்று பகுதியையும் முதுகுப் பகுதியையும் பலப்படுத்துவதோடு மன அழுத்தத்தை குறைக்க இந்த ஆசனம் உதவி செய்யும்.
வியாகராசனம்
உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, இடுப்பு மற்றும் தொடை பகுதியில் இருக்கும் சதைப் பிடிப்பு குறைக்க உதவும்.
உதர் ஆசனம்
தோள்பட்டையை விரிவுபடுத்துவதற்கும், மலச்சிக்கல் பிரச்சனைகளை சரி செய்யவும் உதவும்.
நடராஜ ஆசனம்
உடல் எடையை குறைப்பதற்கும் வயிறு, இடுப்பு, தொடை போன்ற பகுதிகளை பலப்படுத்துவதற்கும், மன அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுகின்றது.
அர்த்த சந்திரா
இது செரிமானத்தை தீர்ப்பதற்கும் மனதில் இருக்கும் பதற்றங்களை குறைப்பதற்கும் உதவுகின்றது