Categories
மாநில செய்திகள்

Pre Metric கல்வி உதவித்தொகை…. பள்ளி மாணவர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

Pre Metric கல்வி உதவித்தொகை திட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாற்றங்களின் அடிப்படையில் புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் ஆதிதிராவிடர்  மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள். 1-10ஆம் வகுப்பு வரை பயிலும் சுகாதார தொழில் புரிவோரின் பிள்ளைகளும் கல்வி உதவித்தொகை பெறலாம். இதில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆதார் எண் பெற்று இருக்க வேண்டும்.

ஆதார் எண்ணுடன் இணைத்த வங்கி கணக்குகே கல்வி உதவித்தொகை அனுப்பி வைக்கப்படும். தொலைபேசி எண்ணை ஆதாருடன் இணைத்து இருக்க வேண்டியது கட்டாயம். National scholarship portal என்ற இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த கல்வித்தொகை பெற மாணவர்களே நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக Nodal Officer-ஐ பள்ளிகள் நியமனம் செய்திடல் வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளது.

Categories

Tech |