Categories
தேசிய செய்திகள்

படிப்பை விட்டுட்டு…. பொம்மையை பத்தி பேசுறீங்க….. மோடி மீது ராகுல் பாய்ச்சல்….!!

மாணவர்கள் நீட், ஜே. இ. இ.தேர்வுகள்  குறித்து ஆலோசிக்க விரும்பும்போது பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குவதா என பிரதமர் நரேந்திர மோடிக்கு திரு. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மங்கி பாத் நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர்  நரேந்திர மோடி உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் இருப்பதாகவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார். விளையாட்டு பொம்மைகள் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்த அவர் பொம்மைகள் உருவாக்கம் குறித்து புதிய கல்விக் கொள்கையில் பாடம் சேர்க்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். பிரதமர்  நரேந்திர மோடியின் இந்த பேச்சை  ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக திரு. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மாணவர்கள் நீட், ஜே. இ. இ,  தேர்வுகள் குறித்து ஆலோசிக்க விரும்பும்போது பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குவதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |