சிறு விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்களை அளிக்கவே மத்திய பாஜக அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்ததாகவும், ஊரடங்கை அமல்படுத்தியதாகவும் திரு ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி திரு ராகுல்காந்தி பிஹாரின் பால்மீகி நகரில் இன்று பிரசாரம் செய்தார். மத்திய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப் பட்டதாகவும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகும் தெரிவித்தார். நாட்டை சரியாக வழிநடத்திய காங்கிரஸ் ஒரு விஷயத்தில் கோட்டை விட்டதாகவும் பிரதமர் அளவுக்கு தங்களுக்கு பொய் உரைக்க தெரியாது என்றும் திரு ராகுல் கூறினார்.
பொருளாதாரம், வேலையின்மை போன்ற உள்நாட்டு பிரச்சினைகளை பிரதமர் திரு மோடி பேசுவது இல்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். நாட்டில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது பெருமுதலாளிகள் யாராவது வாங்கி வாசலில் நின்றனரா.? எனவும் கேள்வி எழுப்பிய திரு ராகுல்காந்தி பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஊரடங்கும் சிறு விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்களை அழிக்கவே கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.