Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம் …!!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலையில் உள்ளார் என்று டெல்லி ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் குடியரசு  தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான 84 வயதான பிரணாப் முகர்ஜி கடந்த 9 ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். இதனால் அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டதோடு இடது கையை உணர்ச்சியற்றதாகவும்  இருந்ததால் ஆர். ஆர். ராணுவ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்த இருப்பது தெரியவந்ததால், மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்து அந்த ரத்தக் கட்டியை அகற்றினர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை கவலைக்கிடமானதால், அவருக்கு வெண்டிலெய்ட்டர் கருவி உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதற்கிடையே பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையை அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை குறித்து நேற்று வதந்தி பரவியது. இதனை அவரது குடும்ப உறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.

 

Categories

Tech |