பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிக மோசமான நிலையை அடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்ற 9ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் குளியல் அறையில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதையடுத்து மறுநாள் அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இடது கை உணர்ச்சி இல்லாமல் போயுள்ளது. இதைத் தொடர்ந்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜியை மருத்துவர்கள் பரிசோதனை பார்த்தபோது அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்து இருப்பது தெரியவந்தது. இதனால் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மூளையில் இருந்த கட்டியை அகற்றி உள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மிகவும் மோசமானது, அதனால் அவருக்கு வென்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் பிரணாப் முகர்ஜிக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அடங்கிய குழு அவருடைய உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையானது நேற்று காலையிலிருந்து மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாக அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் அவருக்கு மூளையில் உள்ள ரத்தக் கட்டி அகற்றப்பட்டுள்ளது. அதனால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் பிரணாப் முகர்ஜி உடல் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் மருத்துவமனைக்கு சென்று பிரணாப் முகர்ஜி உடல் நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர். பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரு விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பிரணாப் முகர்ஜி பூரண நலம் அடைய டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் அவரது ஆதரவாளர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்கள். மேலும் அவரது சொந்த ஊரான மேற்குவங்காளம் மாவட்டத்திலுள்ள கிராமத்திலும் அவருக்காக பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது.