Categories
தேசிய செய்திகள்

சிறு குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க முடிவு – பிரகாஷ் ஜவடேகர்!

சிறு குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை டெல்லியில் நடைபெற்றது. இதில் கொரோனோ தடுப்பு நடவடிக்கை மற்றும் ஏற்கனவே விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழில்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் குறித்து இதில் ஆலோசனனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ரூ.50 கோடி வரை முதலீடு உள்ள நிறுவனங்களுக்கும், சிறு தொழில்களுக்கான சலுகை வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது, 2 லட்சம் சிறுகுறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இது ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக வியாபாரம் செய்வோருக்கு பயனளிக்கும் திட்டம் என பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

மேலும் குறு நிறுவனங்களின் நிதி வரையறை 25 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்த்தப்படுவதாக கூறியுள்ளார். மேலும் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கரிக்கப்பட உள்ளதாகவும், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.

Categories

Tech |