இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் மத்திய அரசு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள 190 இடங்களில் பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் நீங்கள் dgt.gov.in என்று அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு பயிற்சி மேளா என்ற ஆப்ஷனுக்குள் செல்வதற்கு பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் திரையில் தோன்றும் புதிய பக்கத்தில் உங்களுடைய தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
அதன்பின் இமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி கணக்கிற்குள் நுழைந்தால் Apprenticeship Dashboard என்ற ஆப்ஷன் திறக்கும். இதில் பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளாவில் விண்ணப்பதிப்பதற்கான லிங்க் கிடைக்கும். இந்த லிங்கை கிளிக் செய்து கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு, கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து விட்டு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதற்கு 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள், விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் அல்லது திறன் பயிற்சி சான்றிதழ் வைத்திருப்பவர்கள், ஐடிஐ டிப்ளமோ, இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் முடித்தவர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு நவம்பர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.