தேசிய பிரபலம் பிரபாஸின் புதிய படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தள்ளி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பாகுபலி’ படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் தற்போது யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள “ராதே ஷ்யாம்” எனும் திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா நடித்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
இப் படம் வரும் ஜூலை 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் “ராதே ஷ்யாம்” படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.