இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் தேசிய பிரபலம் பிரபாஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பின் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘துரோகி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. இவர் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், தேசிய விருதுகளையும் வென்றது.
இதேபோல் இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படி தொடர்ச்சியாக வெற்றி படங்களை குவித்து வரும் இயக்குனரும் சுதா கொங்கரா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாகுபலி படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸுடன் சுதா கொங்கரா இணைய இருக்கிறார். இயக்குனர் சுதா கொங்கரா இப்பட கதையை பிரபாஸிடம் கூறியதாகவும், அவருக்கு இந்த கதை மிகவும் பிடித்ததால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.