Categories
தேசிய செய்திகள்

“பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார்கள்”….. காங்கிரசை குற்றம் சாட்டிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்…..!!!!

இந்திய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசு பணவிக்கத்தை கட்டுப்படுத்தி எரிபொருளின் விலையை குறைத்துள்ளோம். பாஜக ஆளும் மாநிலங்களில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் விலை குறைக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அவர்களால் அதனை செய்ய முடியவில்லை. பொய்யான வாக்குறுதிகளை தான் அவர்கள் அளிக்கிறார்கள்.

இதனையடுத்து ரூபாய் நோட்டுகளின் கடவுள் உருவங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் வலியுறுத்தியது குறித்து அவர் பேசியது, அவர் தனது ஊழல்களைப் பற்றி பேசக்கூடாது என்பதற்காக புதிய பிரச்சனைகளை கிளப்புகிறார். மேலும் நீங்கள் டெல்லியில் உள்ள இஸ்லாமிய மதகுருகளுக்கு ஆண்டுக்கு ரூ.18000 வழங்கி வருகிறீர்கள். அதனைபோல பாரதியார்கள், குருத்வாரா கிராந்திகள், போதகர்கள் ஆகியிருக்கு ரூ.18000 வழங்குவீர்களா? உங்களால் ஏன் முடியவில்லை? என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |