வறுமையில் தவிக்கும் பெண் எம்எல்ஏ சந்தான பவுரிவிற்கு பாதுகாப்புக்கு சென்ற வீரர்களே அவருக்கு உணவு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது வன்முறைகள் நடைபெற்று வருவதால் அங்கு உள்ள பாஜக எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் சால்டோரா தொகுதியில் பாஜக எம்எல்ஏ சந்தான என்பவர் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 4,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கும் மத்திய படை பாதுகாப்பு வழங்கி வருகிறது. ஆனால் இவரது கணவர் தினசரி கூலி தொழிலாளி இவர்களால் தனது பாதுகாப்புக்கு அனுப்பப்பட்ட மத்திய படை வீரர்களுக்கு தினசரி உணவு மற்றும் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை.
பாஜக எம்எல்ஏவான சந்தான என்பவரும், அவரது கணவரும், குழந்தைகளும் ஒரு பாழடைந்த குடிசை வீட்டில் தண்ணீர் கழிப்பறை வசதி கூட இல்லாமல் இருந்து வருகின்றனர். தங்களுக்கு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் சொந்த செலவில் மளிகை கடையில் பொருள் வாங்கி, காய்கறிகளை வாங்கி கொடுத்து அந்தக் குடும்பத்தினருக்கு உணவு வழங்கி வருகின்றனர்.