Categories
சினிமா தமிழ் சினிமா

போடுடா வெடிய…. “வேற லெவல்ல” ஜனவரி-13 வெளியாகும் “மாஸ்டர்” – ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் ஜனவரி-13 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால் தமிழ் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வந்த நிலையில் மாஸ்டர் பட வெளியீடு மாற்றத்தை ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாஸ்டர் தயாரிப்பு நிறுவனம் திரைப்படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என்று திட்டவட்டமாக கூறியது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் நேற்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே திரையரங்கில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இருக்கையை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று நடிகர் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியது. மேலும் பெரிய நட்சத்திரங்கள் படம் வெளியாகும்போது ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 2021ம் வருடம் ஜனவரி மாதம் 13ம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |