இங்கிலாந்து நாட்டின் தலைநகரில் நடந்த கால்பந்து போட்டியையடுத்து சுமார் 52 வயதுடைய நபருக்கு எப்படியோ தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்கள்.
இங்கிலாந்து நாட்டின் தலைநகரில் குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் மற்றும் லூடன் டவுன் என்னும் அணிகளுக்கிடையே மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து மேல் குறிப்பிட்டுள்ள கால்பந்து போட்டி நடந்து முடிந்த பின்பு அதே பகுதியில் 52 வயதுடைய நபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் சாலையில் மயங்கி கிடந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சாலையில் மயங்கி கிடந்த 52 வயதுடைய நபரை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்கள்.
அதாவது கால்பந்து போட்டி நடந்து முடிந்த பின்புதான் இவ்வாறு 52 வயதுடைய நபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் யூகிப்பதால் கால்பந்து போட்டியை காண வந்த ரசிகர்கள் போட்டி முடிந்த பின்பாக ஏதேனும் சண்டை நடந்து அதனை வீடியோவாக பதிவு செய்து தங்களது மொபைலில் வைத்திருந்தால் தயவுசெய்து தங்களிடம் வந்து ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளார்கள்.