Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசிய நபர் காவல்துறையிடமிருந்து தப்பிக்க 3வது மாடியில் இருந்து கீழே குதித்ததார் …!!

சென்னை பல்லாவரம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய நபர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததால் கால் முறிந்தது.

சென்னை மீனம்பாக்கத்தை அடுத்த பழைய பல்லாவரம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கல்லூரி மாணவர் விஜயகுமார் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். மது விருந்திற்காக தன்னுடைய நண்பர்களை வீட்டுக்குள் அனுமதிக்குமாறு கேட்டதற்கு காவலாளி அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் மூன்றாவது மாடியிலிருந்து காவலாளி இருக்கும் திசையை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியிருக்கிறார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவர் விஜயகுமாரிடம் விசாரணை நடத்தச் சென்றனர்.

போலீசாருக்கு பயந்த மாணவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதும். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இளைஞரிடம் இருந்த 12 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |