Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் அலட்சியம்… பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்… காவல்துறையினரின் எச்சரிக்கை…!!

ஊரடங்கை மீறி  வெளியில் சுற்றித் திரிந்த 383 பேர் மீது வழக்கு பதிந்து, 86 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை உள்ள ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அலட்சியமாக சென்ற 383 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  இதனைத்தொடர்ந்து தகுந்த காரணம் இல்லாமல் வெளியில் சுற்றித் திரிந்தவர்களின் 86 வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக  பின்பற்ற வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |