கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நிலத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் இருக்கும் வெள்ளிமலை பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இதனை தடுக்கக் கோரி பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பேரில் கல்வராயன்மலையில் நீர்நிலைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கல்வராயன்மலை தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வெள்ளிமலை முழுவதும் இருக்கும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நிலத்தை அளவீடு செய்யும் பணி கல்வராயன்மலையின் தாசில்தார் தலைமையில் நடைபெற்றுள்ளது.