Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இங்கு அமைக்க கூடாது…. பொதுமக்களின் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பஷீராபாத் 4-வது தெருவில் ஷபீக் அஹமத் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள சொந்தமான காலி இடத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியபின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |