போஜி என்ற தெருநாய் பயணம் செய்யும் வீடியோ காட்சிகளானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நம் அனைவருக்கும் செல்லப்பிராணிகளை கண்டாலே அலாதியாக இருக்கும். அதிலும் நாயைக் கண்டவுடன் அனைவரின் மனதிலும் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அது போன்று துருக்கியில் போஜி என்ற தெருநாயானது பொது போக்குவரத்தை பயன்படுத்தி பயணம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் போஜி தினமும் இஸ்தான்புல்லில் உள்ள பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் மனிதர்களோடு பயணம் செய்து வருகிறது. மேலும் இது மனிதர்களுக்கு எந்தவொரு இன்னலையும் ஏற்படுத்தாததால் இதற்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது.
https://twitter.com/i/status/1444210121173872644
குறிப்பாக போஜிக்கு என்று தனியாக சமூக வலைத்தளம் தொடங்கப்பட்டு அதில் தினமும் ரசிகர்கள் அதனுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகின்றனர். அதிலும் போஜி பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் மட்டுமின்றி அதற்கு போரடித்தால் மர்மரா கடலில் உள்ள தீவுகளில் படகு சவாரி செய்வதையும் பொழுதுபோக்காக கொண்டுள்ளது. குறிப்பாக போஜியின் செயல்பாடுகளை அப்பகுதி மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்துள்ளது. அதில், போஜி தினமும் பூஜை 30 கிலோமீட்டர் வரை பயணிப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக போஜி குறித்த வீடியோ காட்சிகளானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.