கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்திய வடமாநில வாலிபரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வடமாநிலத்தில் இருந்து காட்பாடி முதல் சேலம் வரை வரும் அனைத்து ரயில்களில் போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஒடிசா மாநிலம், ஹவுராவில் இருந்து கர்நாடக மாநிலம் எஸ்வந்த்பூர் வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தனிப்படையினர் ரயில் நிலையத்தில் வைத்து சோதனை செய்துள்ளனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.
இதைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து கையில் இருந்த இரண்டு பேக்குகளை சோதனை செய்ததில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர் பகவத் பிஸ்வால் என்பதும், 23 கிலோ போதை சாக்லேட்டுகள், 10 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தியதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பகவத் பிஸ்வாலை கைது செய்து அவரிடம் இருந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.