பலர் குழந்தை பிறப்புக்குப் பின் வரும் வயிறை பழைய நிலைக்கு மாற்றவே முடியாது என்கிற கருத்தைதான் தெரிவிக்கிறார்கள். அதை எவ்வாறு சரி செய்வது என்பதைப் பார்ப்போம்.
குழந்தை பிறப்பு என்பது பெண்களுக்கு மறுபிறப்பு என்று சொல்வதை கேட்டிருக்கிறோம். உண்மைதான் தன்னிலிருந்து மற்றொரு உயிரை பெற்று எடுப்பதற்குள் பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மறுபிறப்புக்கு சமமானதுதான். குழந்தை பிறப்புக்குப்பின் மனநிலையில் ஏற்படும் அழுத்தம் ஒரு புறம் இருக்க, குழந்தை பிறப்புக்குப் பின் வரும் தொப்பை உருவத்தையே முழுவதுமாக மாற்றிவிடும். பலர் குழந்தை பிறப்புக்குப் பின் வரும் வயிறை பழைய நிலைக்கு மாற்றவே முடியாது என்கிற கருத்தைதான் தெரிவிக்கிறார்கள்.
இது உண்மையா ?
மகப்பேறுக்கு பின் வரும் வயிறை நிச்சயமாக குறைக்க முடியும் என்பது உறுதி. பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பின் குறிப்பாக 6 மாதம் வரை எந்தவொரு வேலையும் செய்யாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. பிரசவம் ஆப்ரேஷனாக இருந்தாலும் 8 வாரங்கள் கழித்து பெண்கள் தங்களின் பழைய வாழ்க்கை முறைக்கு எளிதாக திரும்பி விடலாம்.
தனக்கு எந்த உடற்பயிற்சியை செய்யப் பிடிக்குமோ அந்த உடற்பயிற்சியை தாராளமாக செய்ய ஆரம்பிக்கலாம் என்றார். நடைபயிற்சி, யோகா, நீச்சல், ஓட்டம், நடனம், ஏரோபிக் என எந்த வகையான உடற்பயிற்சி உங்களுக்கு விருப்பமோ அதை தொடர்ச்சியாக செய்து வந்தாலே உடல் வலுப்பெறுவதுடன் குழந்தை பிறப்புக்கு பின் வரும் மன அழுத்தமும் ஏற்படாமல் தவிர்க்க முடியும்
சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக் கொள்வதும் மிகவும் அவசியம். அவை ஜங்க் புட்டாக இல்லாமல் வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். குழந்தையை கவனித்துக் கொள்ளவே நேரமில்லை” என்று நீங்கள் முணங்கும் சத்தம் கேட்கிறது. ஆனாலும் உடற்பயிற்சி என்றால் அன்றாடம் நிச்சயம் விடாமல் செய்ய வேண்டும்
எந்தவொரு விஷயத்தையும் உடல் பழக வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 90 நாட்கள் விடாமல் செய்யும் பொழுதுதான் நீங்கள் செய்யும் உடற்பயிற்சிக்கு பலன் கிடைக்கும். 90 நாட்களுக்குப் பின் நீங்களே உடற்பயிற்சிக்கு செல்லாமல் இருந்தால் உங்கள் உடம்பே உந்தி தள்ளி நிச்சயம் உடற்பயிற்சியை செய்ய வைத்துவிடும்
உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நேரம் ஒதுக்காவிடில் நிச்சயமாக உடலே உங்களை நோயில் தள்ளி என்னை கவனி என்று கூறி கவனிக்கச் சொல்லும் அப்போது மன உளைச்சலுடன் பண உளைச்சலும் சேர்ந்து கொள்ளும். தாய்மை என்னும் பொறுப்பில் உங்களை முற்றும் முழுதாக கரைத்து விடாமல் உங்களுக்கான உங்களின் உடலுக்கான நேரத்தை முறையாக செலவிட வேண்டும்.