Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பிரசவத்திற்குப் பின் ஏற்படும் முடி உதிர்வா..? உங்களுக்கான எளிய ஹேர் பேக்..!!

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலின் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அந்த காலக்கட்டத்தில் அவர்களின் கூந்தல் நல்ல ஆரோக்கியத்துடனும் கருமையாகவும் வளரும்.

ஆனால், பிரசவத்திற்குப் பின் அதன் அளவு குறைந்துக் காணப்படும். இதனால், முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். மேலும், இந்த சமயத்தில் சத்துக்குறைபாடுகளும் ஏற்படும். இதனால் முடி உதிர்வதை தடுக்க கூடுதல் கவனம் எடுக்கவேண்டும்.
பிரசவத்திற்குப் பின் அதிக புரோட்டின் தரக்கூடிய இந்த ஹேர்பேக்கை போடுவது மூலம், முடி உதிர்வதை தடுக்கமுடியும்.

தேவையானப் பொருட்கள்:

வாழைப்பழம் – 1
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

இவை அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் உங்கள் தலைமுடியின் வேர்கால்களில் தடவி ஊரவைக்கவேண்டும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்பு போட்டு கழுவலாம். கண்டிஷனர்கூட பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஹேர்பேக்கை வாரம் ஒரு முறை போடலாம். இதனால் முடி பிளவு தடுக்கப்படும். கூந்தலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து உதிர்வதும் குறையும்.

Categories

Tech |