Categories
தேசிய செய்திகள்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில்…. கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தபால் நிலையங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் தங்களது கணக்கு செயலில் உள்ளதா என்பதை சரிபார்க்க  வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா, பொது வருங்கால வைப்பு நிதி (PPF) , தேசிய ஓய்வு திட்டம் (NPS) ஆகிய கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கான முக்கிய செய்தி ஒன்று தெரிவிக்கபட்டுள்ளது. அதாவது வரி சேமிப்பு திட்டங்களை வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகள் செயலில் உள்ளதா என்பதை சரிபார்க்க ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையை டெபாசிட் செய்து மார்ச் 31 தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்.

மேலும் கணக்குகளை சரி பார்க்கவில்லை என்றால் உடனடியாக அதனை பார்த்து நடப்பு நிதியாண்டில் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்ய வில்லை என்றால் குறைந்தபட்ச தொகையாவது மார்ச் 31 2022 க்குள் செலுத்த வேண்டும். இல்லை என்றால் கணக்கு முடிவடைந்த பின் அதை மீண்டும் செயல்படுத்துவதற்கு அபராத கட்டணம் செலுத்த வேண்டும். மேலும்  2021 -2022 ஆம் ஆண்டில் புதிய அல்லது பழைய விதிமுறையை தேர்வு செய்தாலும் கணக்கை செயலில் வைத்திருக்க வேண்டுமெனில் குறைந்தபட்ச டெபாசிட்டை செய்து உள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இப்பொழுது PPF யில் டெபாசிட் செய்ய வேண்டிய குறைந்த பட்ச தொகை ரூபாய் 500 இந்த தொகையை டெபாசிட் செய்வதற்கான கடைசி தேதி மார்ச்சு 31 2022 . அதற்குள் டெபாசிட் செய்ய வில்லை என்றால் ரூபாய் 5௦௦ உடன் ரூபாய் 5௦ அபராதம் செலுத்த வேண்டும். இதற்குள் உங்கள் கணக்கு மூடப்பட்டால் கடன் எதுவும் கிடைக்காது. இதனை தொடர்ந்து NPS யில் செய்ய வேண்டிய குறைந்த பட்ச தொகை ரூபாய் 1000 இதை நீங்கள் செலுத்தவில்லை என்றால் ரூபாய் 100 அபதாரம் செலுத்த வேண்டும். மேலும் இரண்டு கணக்குகள் வைத்திருந்தால் தானாகவே அது மூடப்படும்.

இதனை தொடர்ந்து  செல்வமகள் சேமிப்பு கணக்கில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் தொகை ரூபாய் 250 வைத்திருப்பது கட்டாயம். இல்லையெனில் ரூபாய் 50 அபராதம் விதிக்கப்படும். இதேபோல SSY வங்கி கணக்கை தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுக்குள் முடிப்பதற்குள் இயல்புநிலை கணக்கு முறை படுத்தலாம். இந்த நிலையில்  கணக்கில் குறைந்தபட்ச தொகையை விரைவில் சரிபார்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |