மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண் விவாகரத்தான பின் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் பஞ்சாயத்தில் அவருக்கு வித்தியாசமான தண்டனை கொடுக்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம், அகோலா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் விவாகரத்தான பின்னர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் அவ்வாறு திருமணம் செய்து கொண்டது தவறு என்று கூறி அந்த கிராமத்தின் ஜாதி பஞ்சாயத்தில் அந்த பெண்ணிற்கு ஒரு லட்சம் ரூபாய் தண்டனை கொடுத்ததுடன் வாழைப்பழத் தோலில் எச்சிலை துப்பி அதை நாக்கால் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்கு அந்தப் பெண் முடியாது என்று மறுத்தது மட்டுமில்லாமல் காவல்துறையிடம் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்த போலீசார் பஞ்சாயத்து தலைவர்கள் மீது தவறு இருப்பதை உறுதி செய்தனர். இது குறித்து அவர்களிடம் விசாரணை செய்தபோது எங்கள் ஜாதி வழக்கத்தின்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்வது குற்றம் எனவும், அதற்காக இந்த தண்டனையை கொடுத்தார்கள் எனவும் கூறியுள்ளனர்.