Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பொறுமையா சாப்பிட்டு போயிருக்காங்க… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

யாரும் இல்லாத வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 25 பவுன் நகை மற்றும் ரூபாய்10,000 பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் காலனி பகுதியில் வசீம் அக்ரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வசீம் அக்ரமித்திற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரின் குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு திரும்பி வர நேரமாகிவிட்டதால் அனைவரும் வசீம் அக்ரமின் மாமியார் வீட்டிலேயே தங்கி விட்டனர். இந்நிலையில் காலையில் தனது குடும்பத்துடன் வசீம் அக்ரம் திரும்ப வீட்டிற்கு சென்றார்.

அப்போது தனது அறையில் உள்ள கதவுகள் திறந்து இருந்ததைக் கண்டு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் எல்லாம் கீழே சிதறிக் கிடந்துள்ளது. இதனையடுத்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 10,000 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டை சோதனை செய்தனர்.

அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடியோதோடு சமையலறைக்குச் சென்று முட்டைகளை எடுத்து ஆம்லெட் செய்து சாப்பிட்டும், பாலை குடித்துவிட்டு சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் அமைந்துள்ள வீட்டில்  பொருத்தப்பட்டிருந்த  கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தப்பிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |