Categories
உலக செய்திகள்

பொருளாதார மந்த நிலை…. 2024 வரை நீடிக்கும்…. மத்திய வங்கி கணிப்பு….!!!!

வருகிற 2024-ஆம் ஆண்டின் பாதி வரை இங்கிலாந்து நாட்டில் பொருளாதார மந்த நிலை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வட்டி விகிதத்தில் 75 அடிப்படை புள்ளிகளை அந்நாட்டின் மத்திய வங்கியான “பேங்க் ஆஃப் இங்கிலாந்து” உயர்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து வட்டி விகிதம் 3% உயர்ந்தது. பின்பு கடந்த 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. மேலும் “பேங்க் ஆஃப் இங்கிலாந்து” நாணய கொள்கை கூட்டத்தில் வட்டியை உயர்த்துவது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 7 வாக்குகள் ஆதரவாகவும், 2 வாக்குகள் எதிர்ப்பாகவும் பதிவாகியுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து வட்டி விகிதமானது 0.1%-ல் இருந்து 3% வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த செப்டம்பர் மாதத்தில் 10.1% ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட பணவிக்கம் 2 மடங்கு வேகமாக அதிகரிப்பதாக இங்கிலாந்து மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும் அந்நாட்டின் பொருளாதாரம் 2023-ஆம் ஆண்டு முழுவதும் மந்த நிலையிலேயே இருக்கும் என்றும், 2024-ஆம் ஆண்டின் பாதி வரை இந்த நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |