Categories
தேசிய செய்திகள்

போருக்கு போகாதீங்க…! அது கொலை குற்றத்திற்கு சமம் – மத்திய அரசை சாடிய கமல் …!!

இந்தியாவில் சுகாதாரத்துக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வேதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஊரடங்குக்கு பின்னர் நாம் எதிகொள்ள போகும் பிரச்சனை குறித்து ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நமது பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி. இந்திய திருநாட்டின் பொறுப்புள்ள குடிமகனாக ஜனநாயக ஆட்சி சரியான முறையில் நடக்கிறதா என கண்காணிக்கும் பொறுப்பு நம்முடையது. ஏனெனில் அதிகாரத்தை வழங்கியவர்கள் நாம்தானே, அந்தக் கடமையை நாம் தொடர்ந்து செய்வோம்.

ஆனால் இந்த காணொளி கொரோனா நோய்த்தொற்றை நாம் முறியடித்த பின்னர் இந்த ஊரடங்கு பாதிப்பால் வரும் பொருளாதாரப் பிரச்சனைகளால் நம்தேசம் எதிர்கொள்ளப் போகும் கேள்விகளை பற்றியது. நிலைமையை கையாளும் விதத்தைப் பற்றிய விமர்சனங்கள் இருந்தாலும், கட்சி பேதங்களை கடந்து அனைத்து மாநில அரசுகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்படுவது வரவேற்க வேண்டிய விஷயம்.

இந்த ஆரோக்கியமான பழக்கம் கொரோனாவுக்கு பின்னரும் தொடர்ந்து நிதி பங்கீடு, புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் பாதுகாப்பு, கழிவுகளை அப்புறப்படுத்துவது, இனவெறி, சுகாதார பிரச்சினைகள் ஆகிய நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு சுமுகமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது என் ஆசை. இந்தியா முழு வீச்சில் ஈடுபட்டது ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தான். ஆனால் சுகாதாரம் இல்லாததால், உயிர் இழப்பவர்கள் வருடத்திற்கு 16 லட்சம் பேர்.

இந்த நிலையிலும் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பாதுகாப்புக்கான நிதி என்பது, நாட்டின் ஆரோக்கியத்தை பாதுகாப்புக்கும் நிதியை விட அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2020- 21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நமது நாடு பாதுகாப்புக்கு ஒதுக்கி இருப்பது ரூபாய் 4 லட்சத்து 21 ஆயிரத்து 378 கோடிகள். இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் இரண்டு விழுக்காடு.. ஆனால் நம் சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைக்கான நிதி ஒரு சதவிகிதத்தை சுற்றிதான், கடந்த 10 ஆண்டுகளாக இருக்கிறது.

அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைக்கு 8 விழுக்காடு, பாதுகாப்பிற்கு 3.1 விழுக்காடு நிதி ஒதுக்குகிறது. அமெரிக்க மட்டுமல்ல வளமான நாடுகள் அனைத்துமே இந்த முறையில் தான் நிதியை ஒதுக்குகிறார்கள். ஆனால் எனது நாட்டில் இன்னும் பாதுகாப்புத்துறைக்கு நிதி ஒதுக்கீட்டை சிறப்பான அரசின் செயல்பாடுகளாக காண்பித்து கொள்வது வேதனையாகும்.

உண்மையான தேசப்பற்று முதலில் ஒட்டுமொத்த தேசத்தின் ஆரோக்கியத்தைக் காப்பதில் பெருமை கொள்வதே ஆகும். உடல் நலத்தில், சுகாதாரத்தில் அக்கறை இல்லாத நாடு நமது ராணுவத்தின் வீரத்தையும், ஆற்றலையும் காட்டி போருக்கு தயார் என்று அறைகூவுவது  கொலைக்குற்றத்திற்கு  சமமாகும்.

 

Categories

Tech |