Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமியின் ஆபாச புகைப்படம்… சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை பகுதியில் முகமது சபீர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முகமது அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்துள்ளார். அதன் பின் முகமது ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து ஆனைமலை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி முகமது சபீரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த கோவை நீதிமன்றம் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட குற்றத்திற்காக முகமது சபீருக்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

Categories

Tech |