Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அரசகுடும்பம் பற்றி மோசமாக பேசிய பிரதமர் மனைவி.. வெளியாகவுள்ள கட்டுரை..!!

பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி, அரச குடும்பத்தை பற்றி மோசமாக விமர்சித்தது குறித்து ஒரு கட்டுரை வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமரின் மனைவி கேரி பற்றி ஒரு பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரை அமெரிக்காவின் ஒரு பத்திரிகையில் வெளியிடப்படவுள்ளது. அதாவது, கேரி, ஒரு முறை அரச குடும்பத்தினர் பற்றி மோசமாக பேசியிருக்கிறார். எனவே, பத்திரிகையாளர் ஒருவர், பிரதமர் மனைவியின் தோழிகளை தொடர்புகொண்டு, உங்களிடம் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் பற்றி கேரி என்ன கூறினார்? என்று கேட்டிருக்கிறார்.

இது பற்றி அவர்கள் கூறியிருப்பதாவது, அரச குடும்பத்தினர் பற்றி கேரி தெரிவித்த சில கருத்துக்களை கேட்டு நாங்கள் அதிர்ந்து போனோம். அவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று எங்களுக்கு தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

மேலும், கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டிருந்த சமயத்தில், கிறிஸ்துமஸின் போது, பிரதமர் மனைவி கேரியின் நெருங்கிய தோழி, கட்டுப்பாடுகளை மீறி பிரதமரின் வீட்டில் தங்கியிருந்ததாகவும், அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, அந்த கட்டுரை வெளியிடப்படும்போது பல பிரச்சனைகள் வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |